கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில், லாரி - ஆம்னி வேன் மோதிய விபத்தில், காயடமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள துரிஞ்சி தலைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இரு தினங்களுக்கு முன்பு அவர், குடும்பத்துடன் ஆம்னி வேனில், குடியாத்தத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி என்னும் இடத்தில், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, சாலையோரம் இருந்த கேஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த ரமேஷ், அவரது மனைவி தீபா, மகன் நித்தீஷ் , உறவினர்கள் அஞ்சலி , சரளா ஆகிய 5 பேர் இறந்தனர்.
மேலும், காரில் இருந்த சரளாவின் குழந்தைகள் சாரிகா ஓவியா, மற்றும் சதீஷ்குமார் என்பவரின் மகன் நித்தின் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் நித்தின் மட்டும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.
இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #பர்கூர் #சுண்டம்பட்டி #கார் #கேஸ்லாரி #விபத்து #பலிஉயர்வு #சிறுவன் #accident #anothar #boy #death #bargur #tamilnadu #van #students #கிருஷ்ணகிரி #tamilnadu