வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரகம் பாலித்தலுடன் துவங்கியது;

Update: 2023-05-28 15:30 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மையிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த வைகாசி திருவிழாவில்  பங்கேற்ற பக்தர்கள் 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மையிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரகம் பாலித்தலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் குளித்தலை கடம்பன்துறை காவிரியில் நீராடி அங்கிருந்து தெற்கு மையிலாடி சக்தி மாரியம்மன் கோவில் வரை சுமார் 7 கிலோ மீட்டர் மேளதாளங்கள் முழங்க பால்குடம், அக்னி சட்டி, 1008 அலகு தூக்கி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றனர்.அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News