புதிய தொழில்நுட்பத்தில் கமலின் மருதநாயகம்! மணியும் கமலும் போடும் திட்டம்..!

புதிய தொழில்நுட்பத்தில் கமலின் மருதநாயகம்! மணியும் கமலும் போடும் திட்டம்..!

Update: 2024-10-01 14:07 GMT

புதிய தொழில்நுட்பத்தில் கமலின் மருதநாயகம்! | Marudhanayagam Kamal Haasan Movie Update

கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணையும் புதிய படம் மருதநாயகம் என்கிறார்கள். கமல்ஹாசனுடன் மணிரத்னமும் இணைந்து படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தி கோட் படத்தில் விஜய் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். மகன் வேடத்தில் நடிக்க அமெரிக்க சென்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பார்கள். இதுபோன்ற டிஏஜிங் ஏஐ தொழில்நுட்பம் ஏற்கனவே விக்ரம் படத்திலும் பயன்படுத்தப்பட்டதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மருதநாயகம் படத்தின் கதை முழுவதுமாக எழுதப்பட்டு, நடிகர்கள் தேர்வு எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் எல்லாம் பழைய காலம் மலையேறிவிட்டது. காரணம் நடிகர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்ஹாசன்.

மருதநாயகம் படத்தில் கன்னட நடிகர் விஷ்ணு வர்தன், சத்யராஜ், நாசர், அம்ரிஷ் புரி, நசுருதீன் ஷா, பசுபதி, பாபு, ஆர்சி சக்தி உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். இவர்களில் நாசர், சத்யராஜ், பசுபதி தவிர மற்றவர்கள் இந்த கதையில் நடிக்க இப்போது சம்மதிப்பார்களா என்பது தெரியாது. இதனால் மொத்தமாக நடிகர்களை மாற்ற முடிவு செய்துள்ளாராம் கமல்ஹாசன்.

தற்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க சென்றிருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக இருக்கும் கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு மருதநாயகம் படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குவார் என்று தெரிகிறது.

இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. தொடர்ந்து இணைந்திருங்கள். 

Tags:    

Similar News