கரூரில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, புதிய பேருந்து நிலையம் காமராஜர் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது

Update: 2023-05-28 13:15 GMT

கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 63 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி ஒன்பதாம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி கடந்த 22 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெற்றது.

இதில் இந்தியன் கடற்படை அணி லோனா வில்லா திருவனந்தபுரம் கேரளா மின்சார வாரிய அணி , புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி , புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும் பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெற்றது இன்று நடைபெற்ற டெல்லி ஏர் போர்ஸ் அணி சென்னை இந்தியன் வங்கி அணி மோதியதில் 52 க்கு 56 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்களுக்கான இறுதி போட்டியில் கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது அவர்களுக்கு 50 ஆயிரம் ரொக்க பணமும் சூழல் கோப்பை வழங்கப்பட்டது முன்னதாக இரு அணி வீரர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்: கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் விரைவில் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமான நூலகம் அமைய இருக்கிறது. கரூர் மாவட்டம் என்று சொன்னால் வளர்ச்சி பாதை என்ற நிலைக்கு முதலமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளார். குறிப்பாக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளில், கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, புதிய பேருந்து நிலையம் காமராஜர் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News