குமரி மாவட்டத்தில் தடுப்பூசி பதுக்கல் - சிக்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

தடுப்பூசி பதுக்கல் குறித்த புகாரால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர்.

Update: 2021-06-13 09:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கருங்கல் பகுதியில் உள்ள துண்டத்துவிளை தனியார் பள்ளி மற்றும் உண்ணாமலைக்கடை அரசு பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் ஊரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள கூட்டமாக சென்ற நிலையில் கிள்ளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட பணியாளர்கள் ஒன்றிணைந்து சுமார் 200 கோவிட்ஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை பதுக்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் துண்டத்துவிளை முகாமிற்கு 400 தடுப்பூசிகளும் உண்ணாமலைக்கடை முகாமிற்கு 300 தடுப்பூசிகளை மட்டும் அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து சுகாதார நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த தடுப்பூசி மருந்துகளை முறையாக அறிவிப்புகள் வெளியிடாமல் அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து டோக்கன் வழங்கி அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகாமிற்கு சென்று டோக்கன் கிடைக்காதவர்கள் இந்த தகவல் தெரிந்து மருத்துவமனை வந்து டோக்கன் கேட்ட பின்பும் கொடுக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். மேலும் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களின் முதல் டோசை செலுத்தி இரண்டாம் டோஸ் செலுத்தும் நாள் கடந்த பின்பும் அவர்களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தாமல் வேண்டபட்ட குடும்பத்தினர் மற்றும் பெரிய நபர்களுக்கு அதிகாரிகள் வழங்கியதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News