குமரியில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்து 681 ஆக உயர்வு
- சுகாதாரத்துறை தகவல்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.