ஆபாச படம் எடுத்து மாணவிக்கு மிரட்டல்: இருவர் கைது; ராணுவ வீரர்கள் தலைமறைவு

குமரியில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-17 17:44 GMT

கைது செய்யப்பட்ட ஜான் பிரிட்டோ , லிபின் ஜான்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி நடத்தி வந்த மாத சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட கடனை ஈடுகட்ட அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான சஜித் ( 30 ) என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

இதனை முதலீடாக எடுத்து கொண்ட இராணுவ வீரர் சஜித், மாணவிக்கு பண உதவி செய்வதாக உறுதியளித்து அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்த பேச்சு மாணவியுடன் நெருக்கத்தை அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து இருவரும் வாட்ஸ்-அப்பிலும் பேசத் தொடங்கி உள்ளனர். இதனிடையே வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசும் போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டிய சஜித், மாணவியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். பின்னர்  மாணவியின் ஆபாச படங்களை அவரது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

அவர்களும் அந்த வீடியோவை காட்டி மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் மாணவி கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரர் சஜித், அவரது நண்பர்களான ஜாண் பிரிட்டோ ( 33 ), கிரீஷ் ராணுவ வீரர் ( 29 ) , லிபின் ஜான் ( 32 ) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜான் பிரிட்டோ , லிபின் ஜான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராணுவ வீரர்களான சஜித் மற்றும் கிரீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சஜித், கிரீஷ் இருவரும் ராணுவ வீரர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் கைது செய்ய தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News