மண்டைமேல் இருந்த கொண்டையை (சிசிடிவி) மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்

குமரியில் திருடும் போது தலை மேல் இருந்த சிசிடிவி யை மறந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள்.;

Update: 2021-08-12 15:00 GMT

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் மர்ம நபர். சி.சி.டி.வி காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி கிளையின் முன்பக்கம் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரமும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேளையில் இரண்டு மர்ம நபர்கள் ஜோக்கர் முகமூடி அணிந்தபடி வந்து ஏடிஎம் இயந்திரத்தின் முன் இருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து உள்ளனர்.

மேலும் உள்ளே சென்று கையில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த கடப்பாரை மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

தங்களது முயற்சி தோல்வியை தழுவிய நிலையில் அங்கிருந்து கிளம்பிய கொள்ளையர்கள் தங்கள் தலைக்கு மேலே மற்றுமொரு சிசிடிவி இருப்பதை பார்த்து ஒன்றும் எடுக்கவில்லை என்ற ரீதியில் கையை காட்டி செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது.

இன்று காலை வங்கி ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடம் வந்து சிசிடிவி காட்சிகளை கைபற்றி அதன்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News