கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - வெப்பம் தணிந்தது
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெப்பம் முழுமையாக தணிந்தது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. அளவிற்கு அதிகமான வெப்பம் நீடித்து வந்த நிலையில், மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக தொடர்ந்து நீடித்த இந்த கனமழையால், வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. இதனிடையே மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.