குமரியில் மீண்ட விவசாயியை மீண்டும் விழ வைத்த கனமழை

குமரிமாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் 4 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2021-05-22 12:15 GMT

குமரியில் வாழை, நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நாசம். 

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தவ் தே புயலாக உருவெடுத்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் 4 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது.மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் 4 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக அணைகள், நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட வாழை, நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நாசமாகின.

தொடர்ந்து மழை தீர்ந்து கடந்த நான்கு நாட்களாக சகஜ நிலை திரும்பிய நிலையில் நாகர்கோவில், தக்கலை, சுசீந்திரம், மார்த்தாண்டம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இடியுடன் கூடிய பலத்த மழை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏற்கனவே வேதனையில் இருந்து மீண்டு வந்த விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அணைகள், நீர் நிலைகள் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு பலத்தமழை நாகர்கோவில்bதக்கலை சுசீந்திரம் மார்த்தாண்டம் பார்மர்ஸ் கலக்கம்

Tags:    

Similar News