சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-13 12:45 GMT

கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் மண்டல பூஜை, மற்றும் மகரவிளக்கு பூஜை, பங்குனி உத்திர பூஜை பிரசித்தி பெற்றதாக அமைகிறது.

இதனை தவிர பிற ஒவ்வொரு மலையாள மாதங்களில் 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். இதனிடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் 15 ஆம் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறும் நிலையில் அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News