குமரியில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு

குமரியில் வாட்டர் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் காவலர் உயிரிழந்தார்.;

Update: 2022-04-12 13:30 GMT
குமரியில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு

விபத்தில் பலியான பெண் காவலர் கிறிஸ்டல் பாய்.

  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே நேற்று இரவு காவல் பணியை முடித்து அதிகாரியின் உத்தரவின் பேரில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று ஊண்டு சான்றிதழ் வாங்கி வருவதற்காக இன்று காலை கருங்கல்லில் இருந்து நட்டாலம் வழியாக மார்த்தாண்டம் வந்து கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து தண்ணீர் ஏற்றி கொண்டு அதி வேகமாக வந்த டேங்கர் லாரி பெண் காவலர் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த மார்த்தாண்டம் போலீசார் பெண் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News