கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்

கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.;

Update: 2021-08-07 11:30 GMT

துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் பழுதடைந்தும் மணல்மேடுகள் நிரம்பியும் காணப்படுவதால் துறைமுகத்தில் இருந்து படகுகள் கடலுக்குள் செல்லவும் கடலுக்குள் இருந்து துறைமுகத்திற்குள் நுழையவும் முடியாத நிலை உள்ளது.

மேலும் கடல் அலையில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சின்னத்துறை பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கரைமடி வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றுவிட்டு இன்று காலை துறைமுகத்திற்கு திரும்பி வரும்போது துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர் அதில் 3 மீனவர்களும் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை சேர்ந்தனர்.

இதனை தொடர்ந்து துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்த நிலையில் கிடந்த வள்ளத்தை மீட்க சக மீனவர்கள் வள்ளம் மற்றும் விசைப்படகை பயன்படுத்தி கையிறு கட்டி இழுத்து கரை கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News