குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள் முயற்சி பாராட்டும் வகையில் அமைந்தது.;
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வசித்து பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் பிச்சைக்காரர்கள் கவலைகள் தீர மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும் பல நேரங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் இருந்து வந்தன.
தங்களுக்கென்று ஒன்றும் இல்லை என்ற விரக்தியில் பிச்சைக்காரர்கள் வழிதவறி செல்வதை உணர்ந்த அபய கேந்திரா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கென்று ஒரு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இந்த முடிவை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உதவி கேட்டனர் காவல்துறை சார்பில் ஆய்வாளர் சாம்சங் இளைஞர்களின் முயற்சிக்கு ஊக்கமளித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றினார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து மீட்கப்பட்ட பிச்சைக்காரர்களை வாகனம் மூலம் அழைத்து வந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான அனாதை மடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
தினசரி உணவு, உடல்நலன் சோதனை, மருந்துகள், ஆடைகள் போன்றவற்றை அபய கேந்திரா அமைப்பினர் அளித்த நிலையில் இளைஞர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி, காவல்துறை இணைந்து செய்த இந்த பெரும் முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டை பெரும் வகையில் அமைந்தது.