வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்
குமரியில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199 ஆவது அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற, வடலூரில் சத்திய ஞான சபை தொடங்கியவர் வள்ளலார். அணையா அடுப்பு மூலம் அன்னம் வழங்கிய திரு அருட்பிரகாச வள்ளலாரின், 199வது அவதார தினம், அவரது பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199வது அவதாரதினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக மங்கள ஆரத்தி, ஜோதி வணங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுடன் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சிறுமிகள் நடத்திய கீர்த்தனா பக்தி இசை நிகழ்ச்சி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.