மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை

குமரியில், மண் எடுக்க அரசு அனுமதி வழங்காததால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2021-09-24 06:56 GMT

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, இன்று  மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், சுங்கான்கடை உள்ளிட்ட 24 ஊர்களில் சுமார் 8 ஆயிரம் குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி மட்டுமே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.

கடந்த 2 மாதங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் 10 முறைக்கும் மேலாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்த அவர்களை, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளர்கள் , வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்கள் தங்களுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றால், ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை நம்பியே வாழ்ந்து வரும் தாங்கள்,  இப்போதே மண்பாண்டம் செய்யும் பணியை தொடங்கினால்தான் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில்,  அமைச்சர் வரை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்த பின்னரும்,  அரசு மண் எடுக்க அனுமதி தரவில்லை என்றனர்.

Tags:    

Similar News