வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது சுமார் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக செய்து வரும் இந்த கனமழையின் காரணமாக குளங்கள் உடைந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனால் நீர் வெளியேறி சாலைகளில் ஆற்று வெள்ளம் போல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சூறைக்காற்று மற்றும் பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் குளங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும் நாகர்கோவில், மருங்கூர், புத்தேரி, தெரிசனங்கோப்பு, ஆசாரிப்பள்ளம், இறச்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1400 ஏக்கர் நில பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட நெல் விவசாய பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளன.
ஏற்கனவே கனமழை, தவ் தே புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக வேதனை தெரிவித்து உள்ளனர்.