குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.;
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் மாரியம்மன் கோவில் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.