கன்னியாகுமரியை மீண்டும் மிரட்டிய 'வருணன்: பல இடங்களில் கனமழை
கனமழை ஓய்ந்து சகஜ நிலைக்கு திரும்பிய கன்னியாகுமரியை, கனமழை மீண்டும் மிரட்டியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன் தொடங்கி 3 நாட்கள் நீடித்த கன மழையின் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளம் உருவாக்கி கன்னியாகுமரியின் மேற்கு மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. மழையின் தாக்கம் குறைந்து தற்போது குமரி மாவட்டம் சகஜ நிலைக்கு திரும்பினாலும், சில கிராமங்களில் கனமழையின் வகிடுகள் குறையாத நிலையில் உள்ளது.
இதனிடையே, இன்று காலை முதல் குமரி மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்த நிலையில், பிற்பகலில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, திங்கள்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது. இடியுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கனமழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.