தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 110வது பிறந்த நாள்

தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 110 வது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

Update: 2021-09-26 13:45 GMT

லூர்தம்மாள் சைமனின் பிறந்த நாள் விழா 

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்து இருந்த நேரத்தில் இரண்டு முறை கேரளா சட்டமன்ற உறுப்பினராகவும், 1956ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்னர் குளச்சல் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

காமராஜர் அமைச்சரவையில் மீன்வளதுறை, உள்துறை அமைச்சராக பணியாற்றிய இவரே தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இதனிடையே லூர்தம்மாள் சைமனின் 110வது பிறந்த தினம் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள் சைமனின் சொந்த ஊரான மணக்குடி கிராமத்தில் அவரது திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லூர்தம்மாள் சைமன் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மீனவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News