அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு

குமரி அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

Update: 2022-01-24 16:45 GMT

தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது . இங்கு வருடம்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா கடந்த 14-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு அய்யா மயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், நடைபெற்றது. இதனிடையே 10 ஆம் நாளன இன்று தைத் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

கோவில் குருக்கள் பாலஜனாதிபதியிடம், பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் ஏய்ப்பு நிகழ்ச்சிகாக வாழை தார்கள், வெற்றிலை, பூக்கள், தேங்காய் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு வந்து தேரில் கொடுத்தனர்.

Tags:    

Similar News