குமரியில் 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் 6400 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் இன்று 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலம் 6400 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.;

Update: 2021-07-01 13:30 GMT
குமரியில் 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்  6400 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற  கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம்பெண்.

  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் தடுப்பூசி போட தொடங்கிய நாள் முதல் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து கவனம் செலுத்திய மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையை போக்க ஆன் லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது. அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 19 இடங்களில் ஆன் லைன் பதிவு முறையிலும் 17 இடங்களில் நேரடி டோக்கன் முறையிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. அதன் படி மாவட்டத்தில் 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலமாக 6400 பயனாளர்கள் பயன் பெற்றனர்.

Tags:    

Similar News