"எங்க ஊர்ல குளத்தை காணோம்" : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி

ஐயா எங்க ஊர்ல குளத்தை காணல என குமரியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் புகாரால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.;

Update: 2022-04-22 08:45 GMT

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்ளும் நிலையில் கூட்டத்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும், வாதங்களும் சில நேரங்களில் விவாதங்களும் நடைபெறும்.

இதனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. வீடு மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை காணவில்லை சாலையோரம் நிறுத்தி சென்ற வாகனங்களை காணவில்லை என பல புகார்கள் வருவது வழக்கம். ஆனால் விவசாயிகள் கூட்டத்தில் ஒரே ஊரில் நான்கு பாசன குளங்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

குளம் இருந்தால்தான் பாசனம் நடைபெறும் என்ற நிலையில் இந்த புகார் வலுவான பிரச்சனையாக எடுத்து கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதனிடையே காமெடியாக தொடங்கிய குளத்தை காணவில்லை என்ற பிரச்சனை சிறிது நேரத்திலேயே சீரியஸாக சென்றதால் கூட்டத்திற்கு வந்து இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News