நாகர்கோவில் மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

நாகர்கோவில் மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தடுப்பூசி.;

Update: 2021-06-20 14:00 GMT
நாகர்கோவில் மாநகராட்சி சிறப்பு ஏற்பாட்டில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் காய்ச்சல் சளி பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் முதியவர்கள், ஆதரவற்றோர் தங்கி இருக்கும் பகுதியில் தொற்று தடுப்பு முகாம்களையும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் நடத்துனர்கள், ஓட்டுனர்கள், டிப்போ தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குப்பியும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமணையில் நடைபெற்ற இந்த முகாமின் மூலம் அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் நடத்துனர்கள், ஓட்டுனர்கள், டிப்போ தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குப்பியும்பத்தினர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நாளை முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தடுப்பூசி தங்களுக்கு பயன் அளிப்பதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News