முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி - மாநகராட்சி நிர்வாகம் அசத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாகர்கோவில் இரண்டு மையங்களில் முதல்கட்ட தடுப்பூசியும் ஒரு மையத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டன. இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த மாநகராட்சி நிர்வாகம் அதிகாலையிலே தங்களது ஊழியர்களை கொண்டு டோக்கன் வினியோகம் செய்து கூட்டம் சேருவதை தவிர்த்தது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டங்கள் அமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருப்பில் இருக்கும் தடுப்பூசிக்கு மூன்று மடங்கு பொதுமக்கள் கூடியதால் தடுப்பூசி போட முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை தெரிவித்ததோடு முதலில் வரும் நபர்களுக்கு தடுப்பூசி இருப்புக்கு தகுந்தாற் போல் டோக்கன் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்று உள்ளது.