ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை: குமரியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குமரிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-07-24 13:15 GMT

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் வருகையை முன்னிட்டு குமரிமாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர நிர்வாகத்தின் தேசிய செயற்குழு கூட்டம் வருகின்ற 27 மற்றும் 28 -ஆம் தேதிகளில், குமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகின்ற 26 -ஆம் தேதி இரவு கன்னியாகுமரி வருகின்றார்.  அவருக்கு கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது,

இதை தொடர்ந்து 28 -ஆம் தேதி அவர் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் வருகையை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News