மக்களின் நிலையறிந்து ரேசனில் தரமான அரிசி வழங்க வேண்டும் - எம்.ஆர் காந்தி

தமிழக அரசும் உணவு வழங்கும் துறையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியினை வழங்கவேண்டும்.

Update: 2021-05-22 12:00 GMT

எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ

கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு அறிவித்து இருப்பதால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் உணவை சமைத்து சாப்பிடுவதற்கு அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான மற்றும் மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் அரிசியினை வழங்க வேண்டும் தற்போது வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக சமைத்து சாப்பிட முடியாத அளவில் உள்ளது.

பொருளாதார சுமை இருப்பதால் வெளிச்சந்தையில் தேவையான அரிசி பணம் கொடுத்து வாங்கும் நிலையில் பொதுமக்கள் இல்லை. எனவே தமிழக அரசும் உணவு வழங்கும் துறையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Tags:    

Similar News