நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

Update: 2022-02-24 00:00 GMT

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்று,  முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதனிடையே நகராட்சியாக இருந்து கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக கடும் போட்டி நிலவியது.

மொத்தம்,  52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 356 வேட்பாளர்கள் களம் கண்டனர், இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 356 வேட்பாளர்களின் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்ற விபரம்  வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News