நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது
குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது.;
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெறும் தேர்தல் என்பதால், மேயர் பதவியை தக்க வைத்து கொள்வதில் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 52 வார்டுகளில் திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும், பாஜக 11 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும், மதிமுக 1 வார்டுகளிலும், வெற்றி பெற்றுள்ளது.
மேயர் பதவிக்கு 27 இடங்கள் தனி மெஜாரிட்டி என்ற நிலையில் 24 இடங்களில் வெற்றி பெற்ற திமுக மேயர் பதவியை அலங்கரிக்கும் என்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி துணை மேயர் பதவியை அலங்கரிக்கும் என கணிக்கப்படுகிறது.