குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி: மேயர் பங்கேற்பு
குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார்.;
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பி.பி.எ துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பி.பி.எ துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு மேயர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.