விற்பனை, விலையில் சரிவை சந்திக்கும் வியாபாரிகள்

Update: 2021-04-22 09:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் வாழைத்தார்கள், காய்கறிகள் விலை சரிவை சந்தித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன் படி இரவு நேர ஊரடங்கு, கோவில் திருவிழாக்கள் ரத்து, திருமண நிகழ்ச்சியில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்பது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்புகளால் சந்தைகளில் வாழைஇலை, வாழைத்தார்கள், காய்கறிகள் விலை மற்றும் விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அப்டா மார்க்ர்ட்டில் வாழை இலை, வாழைத்தார்கள், காய்கறிகள் வாங்க வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவை தொடர்ந்து விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது.விற்பனை முடங்கியதால் விலையும் குறைந்து உள்ளது, இதனால் பெரும் பொருட்செலவில் விவசாயம் செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News