தனியார் முயற்சியால் பயன்பாட்டிற்கு வந்த குளம்

Update: 2021-04-17 06:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளம் தனியார் அமைப்பின் முயற்சியால் பயன்பாட்டிற்கு வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் உள்ள பெரிய குளம் ஒன்று செடிகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி பயன்படுத்த முடியாத அளவில் காணப்பட்டது. இந்த குளத்தை சீர் செய்தால் நீர் ஆதாரம் பெருகும் என்பதோடு விவசாய தேவைகளுக்கும் பயன்படும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள்,இந்நிலையில் குளத்தை சீர் செய்ய முன் வந்த வெல்பர் அசோசியேசன் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் அமைப்பினர் அரசின் அனுமதி பெற்று ஆகாய தாமரை இலைகளை தூவி ஜேசிபி இயந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி சீர் செய்தனர்.

3 லட்ச ரூபாய் செலவில் ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பணி முடிவு பெற்று உலக நீர் தினத்தை முன்னிட்டு பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பணியை மேற்கொண்ட தனியார் அமைப்பிற்கும் உதவியாக இருந்த தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு இயற்கை ஆர்வலர்கள், நீர் அமைப்பினர் விவசாய அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News