முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-08-19 11:45 GMT

முடக்கி வைத்துள்ள பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் என்று குமரியில் சிஐடியு ஆர்ப்பாட்டம் செய்தது.

கொரோனா பரவலை காரணம் காட்டி மின்வாரியத் துறை ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அரசு வழங்கி வந்த பஞ்சப் படியை தமிழக அரசு முடக்கியது.

மத்திய அரசில் இதே நிலை இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் அந்த பஞ்சப்படி வழங்க முன்வந்துள்ளது, அதே வேளையில் தமிழக அரசு முடக்கிய பஞ்சப் படியை வழங்க இதுவரை முன்வரவில்லை.

கடந்த தேர்தலின் போது கூட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதிகளை கொடுத்த இந்த திமுக அரசு தொழிலாளர்களின் உரிமைகளையும் கொடுத்த வாக்குறுதிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும்.

அதனை சட்டமன்ற கூட்டதொடரில் அறிவிக்க வேண்டும் என கேட்டு கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News