கன்னியாகுமரியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.;

Update: 2022-01-12 09:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில்,  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக,  மூன்றாம் தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News