மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி

ஆம்புலன்ஸ் மூலம் மளிகை பொருள் வாங்க வந்தவருக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

Update: 2021-06-14 01:45 GMT

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாவட்டத்தின் மிகப்பெரிய வர்த்தக மையமான நாகர்கோவில் கம்பளம் பகுதி முழுவதுமாக மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.அதன் படி இரவு 9 மணி முதல் 11 மணி வரையிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மொத்த விற்பனைக்கும் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வெளி மாவட்டங்களில் இருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொருட்களை இறக்கி கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மொத்த கொள்முதல் செய்யும் கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு அனுமதி பெற்றவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி அனுமதி பெறாமல் மாநகராட்சி மற்றும் போலீசாரை ஏமாற்றி ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொருட்கள் வாங்கியவரை பிடித்த அதிகாரிகள் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் அனுமதி இல்லாத அனைத்து வாகனங்களையும் திரும்பி போக வைத்த அதிகாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

Tags:    

Similar News