நாகர்கோவிலில் தென்னிந்திய திருச்சபை சார்பில் நடத்தப்பட்ட 7 ஜோடி திருமணம்
நாகர்கோவிலில் தென்னிந்திய திருச்சபை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. எனப்படும் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவ அமைப்பு இறைப்பணியுடன் கல்வி, மருத்துவமனை என சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்திய திருச்சபை சார்பில் நாகர்கோவிலில் வைத்து ஏழு ஏழை பெண்களுக்கான திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.திருச்சபையின் பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த "நம்ம வீட்டு கல்யாணம்" திருச்சபையின் சார்பில் ஏழு நலிவடைந்தகுடும்பங்களை சேர்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருச்சபையின் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருச்சபை சார்பில் நடத்தப்பட்ட இந்த இலவச திருமண விழாவில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. தென்னிந்திய திருச்சபை பேராயர் செல்லையா நடத்தி வைத்த இந்த திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.
விழாவில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிறிஸ்தவ மத பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.