கொரோனா கொடுமையை விட பெரியகொடுமைபசி-குமரியில்களத்தில் இறங்கிய இளைஞர்கள்

சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.

Update: 2021-05-21 13:45 GMT

குமரியில் உணவளிக்கும் இளைஞர்கள்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தி உள்ளது.

முழு ஊராடங்கை முறையாக அமல்படுத்த காவல்துறை தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் சாலையோரம் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆதறவற்றோர்கள் உண்ண உணவு இல்லாமல் குடிக்க நீர் இல்லாமல் பசியால் வாடும் சூழ்நிலை ஏற்பட்டது.

கொரோனா கொடுமையை விட பசி பெரிய கொடுமை என்பதை நேரில் கண்ட சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கினார்.

அதன்படி தனது சொந்த செலவில் உணவு தயாரித்து அதனை நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் காணப்படும் சாலையோர வாசிகளுக்கு கொடுத்து பசியாற்றி வருகின்றனர்.


தினமும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்று வேளையும் தரமான உணவும் குடிநீரும் வழங்கி வரும் இளைஞர்களின் செயல் பாராட்டிற்கு உரியதாக அமைகிறது.

Tags:    

Similar News