கன்னியாகுமரி - கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை -தலைமை செயலர் ஆய்வு.

நிர்வாகம் மேற்கொண்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம், காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

Update: 2021-05-21 14:00 GMT

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம், காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா குமரி மாவட்டம் வருகை தந்தார்.

தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த அவரிடம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல் துறை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.


தொடர்ந்து வார் ரூம், வாகன சோதனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்களை அரசு கூடுதல் தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார்..

Tags:    

Similar News