கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பலி தர்ப்பணம் செய்த கிராம மக்கள்

குமரியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பலி தர்ப்பணம் செய்த கிராம மக்கள்.

Update: 2021-08-08 12:30 GMT

குமரியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்.

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு உட்பட புனித தலங்களில் பலி தர்ப்பணம் ( திதி ) செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதே நிலை ஏற்பட்டுள்ளதால் குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளத மீனச்சல் கிராமத்தில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் வளாகத்தில் கிராம மக்கள் சமூக இடை வெளி பின் பற்றி, மாஸ்க் அணிந்து மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர்.

இதே போன்று ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தர்ப்பணம் செய்தனர்.


Tags:    

Similar News