குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு

கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Update: 2021-09-14 13:45 GMT

கிள்ளியூரில், வாகனச் சோதனையின் போது, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார்.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்றன கட்டாயம் என்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில்,  பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வது வாடிக்கையாக அமைந்தது.

இதனால் விபத்துகள் அதிகரிப்பதுடன், விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பான வந்த தொடர் புகார்களை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வாகனச்சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி, குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளிலும்,  ஒரே நாளில் இன்று நடைபெற்ற வாகனச்சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவணங்கள் இன்றி வருதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல் என,  போக்குவரத்து விதிகளை மீறியதாக 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News