கன்னியாகுமரியில் அதிவேகத்தில் வந்து குளத்தில் மூழ்கிய சொகுசு கார் : தந்தை மகள் பலி

அதிவேகத்தில் வந்த சொகுசு கார் குளத்தில் மூழ்கியதில் தந்தை மகள் பலியானார்கள்.;

Update: 2021-06-21 14:45 GMT

கன்னியாகுமரியில் குளத்தில் மூழ்கிய காரில் இருந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே செல்லம் கோணம் பகுதியில் சாலையோரமாக செம்மண் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இன்று அவ்வழியாக வந்த ஒரு சொகுசு கார் திடீரென நிலைதடுமாறி குளத்திற்குள் பாய்ந்து மூழ்கியது.

காருக்குள் 3 பேர் காணப்பட்டுள்ள நிலையில் மூழ்கிய வேகத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவரை மீட்டனர். ஏனைய இருவரும் சுமார் 15 அடி ஆழம் கொண்ட தண்ணீருக்குள் காருடன் மூழ்கினர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் சொகுசு காரோடு மூழ்கியவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் காரில் இருந்த ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது பலியானவர்கள் அருமனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அருமனை அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோயிலுக்கு தனது மூத்த மகள் (21) வயதான ஷாமிலி இளைய மகள் (20) வயதான ஷாலினி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் மூழ்கியதும் தெரியவந்தது.

தொடர்ந்து ராஜேந்திரனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News