மழையால் குற்றியார் பாலம் துண்டிப்பு - மாணவியரோடு நடுவழியில் நின்ற பஸ்
குமரியில் கனமழையால் குற்றியார் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவிகளுடன் நடுவழியில் அரசு பேருந்து நின்றது.
கன்னியாகுமரியில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள குற்றியார் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.
பொதுவாக 3 கிராமங்களை இணைக்கும் இந்த பாலம் வழியாக மட்டுமே, அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவர். இதனிடையே பாலம் துண்டிக்கப்பட்டதால் அரசு பேருந்து நடுவழியில் சிக்கியது, இதனால் பள்ளி மாணவ, மாணவியர் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர், மாற்று ஏற்பாடுகள் மூலம் மாணவ மாணவிகள் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சற்று பரபரப்பு நிலவியது.