வயல்வெளிகளுக்குள் புகுந்த மழை நீர்: அறுவடை பணிகள் முடிந்ததால் தப்பிய நெற்பயிர்
கன்னியாகுமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில்நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய நீடித்த கனமழையானது இன்று காலை வரை நீடித்தது, இதனிடையே கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் கால்வாய்கள் குளங்கள் வேகமாக நிரம்பின, இந்நிலையில் நாகர்கோவில் அருகே அருமநல்லூர் பகுதியில் குளத்தில் இருந்து வெளியேறிய நீரானது அங்கிருந்த வயல்வெளிகளில் புகுந்தது. இதன் காரணமாக வயல்வெளிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கிருந்து சாலையை கடந்து மறுகால் பாய்ந்து வருகிறது, தண்ணீர் புகுந்ததால் வயல்வெளிகள் குளம் போல் காட்சியளிக்கும் நிலையில் தற்போது கன்னிப்பூ சாகுபடி அறுவடை பணிகள் முடிந்ததால் நெற்பயிர்கள் சேதத்திலிருந்து தப்பின. ஆனால், நூற்றுகணக்கான வைக்கோல் கட்டுகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ள. அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் சும்மா 250 ஏக்கர் பரப்பளவிளான நெல் பயிர்கள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு என்று விவசாயிகள் தெரிவித்தனர்.