குமரியில் ஒரே நாளில் 8950 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8950 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 7680 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 1270 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இதற்காக 33 மையங்களில் தடுப்பூசிகள் போடப்படும் என அறிவித்த மாவட்ட நிர்வாகம் கோவில் ஷீல்டுக்கு 15 மையங்களில் நேரடியாகவும் 12 மையங்களில் ஆன் லைன் முறையிலும் டோக்கன் பெறலாம் என்றும் அறிவித்தது.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக 2 மையங்களில் வெளிநாடுகள் செல்பவர்கள் மட்டும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு மட்டும் 4 மையங்கள் மூலம் நேரடியாகவும் 1 மையத்தில் ஆன் லைன் முறையிலும் டோக்கன் பெற்று செலுத்தி கொள்ளலாம் என அறிவித்து.
இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டது, இன்று நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 8950 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.