பாதையை அடைத்த வனத்துறை : கிராம மக்கள் காத்திப்பு போராட்டம்
குமரியில் பாதையை அடைத்த வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்;
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் சந்திப்பு பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 4 ஹெக்டேர் சுற்றளவு கொண்ட இடம் கடந்த 1991 -ஆம் ஆண்டு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆராயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் கிராமபகுதிக்கு பாதிப்புகள் ஏற்பட கூடாது என்றும், கிராம பகுதிக்கு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவு கொடுத்ததாக தெரிகிறது.ஆனால் அந்த உத்தரவை வனத்துறை நடைமுடைப்படுத்தாததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைந்து இருக்கும் பாதையை வனத்துறையினர் வேலி போட்டு அடைக்கும் பணியை மேற்கொண்டனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் பொதுமக்கள் குறித்து கவலைப்படாத வனத்துறை பாதையை அடைத்து அத்துமீறளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..அப்போது போலீசார் அவர்களை தடுத்து அவர்களை களைந்து போக கூறியதால் தங்கள் கிராமத்திற்கு சென்ற பொது மக்கள் அங்குள்ள சமூக நல கட்டிடத்தில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.இதனிடையே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள போவதாக கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.