குமரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி - மக்கள் மத்தியில் வரவேற்பு

குமரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Update: 2021-11-23 02:15 GMT

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளை,  மாவட்ட நிர்வாகம் முழு அளவில் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதோடு, தடுப்பூசி செலுத்தினால் வாரம் தோறும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 22 நபர்களுக்கு தங்கக்காசு பரிசும் அறிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டினாலும் ஒரு சில கிராம பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி. வீடுதேடி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நேரடியாக வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News