புதுவகையான சைபர் மோசடி - பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

குமரியில் புதுவகையான சைபர் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்டகாவல்துறை அறிவுறுத்தி உள்ளது.;

Update: 2022-01-06 15:45 GMT

.கன்னியாகுமரி மாவட்டத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு இணையதளம், எ.டி.எம் கார்டு புதுப்பித்தல் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப்பிள் ஆபசமாக வீடியோ கால் செய்து பதிவு செய்து மோசடி நபர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் மேற்கண்ட சம்பவங்களில் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். மேலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு காவல்துறையை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News