குமரியில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமரியில் பள்ளி மாணவ மாணவிகளின் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் நடைபெற்றது.

Update: 2022-04-20 11:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாள் புனித பிரான்சிஸ் அசிசி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாள் புனித பிரான்சிஸ் அசிசி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பூதப்பாண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி திட்டுவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளை வலம் வந்தது.

இந்த பேரணியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். மேலும் போதை பொருட்கள் தடுப்பு எண்ணான 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்த தகவல் அளிக்கும்படி வலியுறுத்தினார். 

Tags:    

Similar News