குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி
குமரியில் 71,703 மாணவ மாணவிகளுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 15 முதல், 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில், தகுதிடைய 15 முதல், 18 வயது வரையுள்ள மொத்தம் 74 ஆயிரத்து 165 மாணவர்கள், தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு தகுதியானவர்கள். இதில் இதுவரை 71 ஆயிரத்து 703 மாணவ-மாணவிகளுக்கு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.