அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த மன்னனுக்கு பிறந்தநாள்

அணை கட்டி விவசாயிகள் வாழ்வாதாரம் காத்த ஸ்ரீ மூலம் திருநாள் மன்னனின் பிறந்தநாள் குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-26 06:30 GMT

 பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாமல் காட்சியளிப்பதோடு விபசாயம் செழிக்க செய்யும் இந்த அணை 1906 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜாவால் கட்டப்பட்டது.

இதனிடையே சிறப்பு பெற்ற பேச்சிப்பாறை அணையை கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் 164 ஆவது பிறந்தநாள் குமரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி அலங்கரித்து வைக்கப்பட்ட மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகராஜா திருவுருவ படத்திற்கு. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News